"பள்ளி நடத்துவதற்கு திமுகவினர் என்னிடமே பணம் வாங்கினார்கள்”- மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டு

 
"பள்ளி நடத்துவதற்கு திமுகவினர் என்னிடமே பணம் வாங்கினார்கள்”- மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த கால ஆட்சியில்  பள்ளி நடத்துவதற்கு லஞ்சம் வாங்கப்பட்டது என சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் பகிரங்கமாக திமுக மீது குற்றம்  சாட்டி உள்ளார்.


சட்டப்பேரவையில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், “கடந்த ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் பெறப்பட்டது. கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்னிடமே லஞ்சம் வாங்கினார்கள். கடந்த திமுக ஆட்சியில் கட்டாயப்படுத்தி என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நானே சாட்சி. நான் பள்ளி நடத்துகிறேன் என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள் எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள் எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.  தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். Quantity-ஆ? Quality-ஆ? எவ்வளவு ஸ்கூல், காலேஜ் கொண்டு வந்தோம் என்பது முக்கியம் இல்லை.. Quality இருக்கிறதா? என்பது தான் முக்கியம்” என்றார்.