பெலிக்ஸ் ஜெரால்டை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - திமுக உறுப்பினர் ஆஸ்டின்..!

 
1

சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனத் திமுக உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது தனிப்பட்ட விருப்பம் என்றார். தொடர்ந்து குறுக்கிட்ட சபாநாயகர், சாதாரணப் பதவிக்கும் சட்டப்பூர்வப் பதவிக்கும் வேறுபாடு உள்ளதால், இதுகுறித்து ஆய்வு செய்யலாம் எனத் தெரிவித்தார்.