ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது!
Dec 18, 2024, 08:00 IST1734489040000
ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22-12-2024 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.