கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியில் ஓட்டமெடுத்த திமுக மேயர்!

 
meeting

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியில் ஓட்டமெடுத்த திமுக மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சுந்தரி ராஜா அறிவித்தார். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகளை பேசிக் கொண்டிருந்த பொழுது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவதால் தங்களது பணிகளே தடைப்படுவதாக குற்றம் சாட்டினார். 

அப்போது மாநகராட்சி ஆணையர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என கூறிய நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கூட்டம் முடிக்கப்பட்டதாக பாதியிலேயே வெளியேறினார். அப்போது கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் தங்களை பகுதிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அது தொடர்பாக கோரிக்கை வைத்தால் அதிகாரிகள் அதையும் ஏற்கப்படாமல் உள்ளதாகவும் கூறி குற்றச் சாட்டை கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.