“சிறைக்கு அஞ்ச மாட்டோம்”- கனிமொழி
சிறைகளுக்கும், கைதுகளுக்கும் அஞ்சுபவர்கள் திமுகவினர் அல்ல என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்தித்த பின் பேட்டியளித்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, “சிறைகளுக்கும், கைதுகளுக்கும் அஞ்சுபவர்கள் திமுகவினர் அல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. ஜனநாயகத்தில் தவெகவிற்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது. தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். தவெக ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை. "தி.மு.கவிற்கு பாளையங்கோட்டை சிறை ஒன்றும் புதிதல்ல..! இதை நாங்கள் பெருமையாக தான் நினைக்கிறோம்.. இதற்கெல்லாம் தி.மு.கவினர் பயப்படமாட்டோம். த.வெ.க அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்புகிறார்கள்.. யாருக்கோ பயந்து கொண்டு த.வெ.க ஆட்சி நடத்துகிறது. எந்த காலத்திலும் திமுக அதிமுகவை நெருங்கியது கிடையாது. தமிழகத்திற்காக போராட வேண்டிய காலத்தில் அதிமுக, திமுக இணைந்து சென்று பிரதமரை சந்தித்துள்ளோம். தமிழக பிரச்சனைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

