யார் மேல் பழி போடலாம் என தேடிக்கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் வராது - கனிமொழி எம்.பி.
யார் மேல் பழி போடலாம் என தேடிக்கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் வராது என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக எம்பி கனிமொழி, “எது நடந்தாலும் யார் மீதும் பழி போடாமல் ஆட்சி நடத்தியவர் கலைஞர் கருணாநிதி, அதே வழியில்தான் மு.க.ஸ்டாலினும் ஆட்சி நடத்தினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் இன்று வரை தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கின்றார் தலைவர் கலைஞர் கருணாநிதி. புதிய ஆட்சி அமைந்த பின் நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தேர்தல் மனநிலையிலிருந்து வெளிவராமல் மீண்டும் மீண்டும் திமுகவை குறை சொல்லிவிட்டு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இதன் மூலம் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
தவெக ஆட்சியில் இருக்கும்போது திமுக மீது குற்றம்சாட்டுவது சரியல்ல. திருச்சியில் பிரசாரத்தில் பேசுவது போன்று CM விஜய் பேசியுள்ளார். யார் மேல் பழி போடலாம் என தேடிக்கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் வராது. திமுக தொடர்ந்து மக்களுக்காக பாடுபடும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பற்றி கவலை இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றுள்ளதா என தெரியவில்லை. ஆட்சியில் உள்ளவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், நீங்க பொறுப்பேற்று கொள்ளுங்கள்.” என்றார்.

