தாய்மாமாவா இல்லை dash மாமாவா?- திமுக கேள்வி

 
விஜய்

தாய்மாமன் ஆட்சி என்று ரீல் விட்டுக்கொண்டுத.வெ.க ITwing இது போன்ற செயல்களை நியாயப்படுத்தப் பார்க்கிறது. அப்படியென்றால் இது தாய்மாமா ஆட்சியா? இல்லை dash மாமாவா? எனக் கேட்கத்தானே செய்வார்கள்? என திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தில் 21 வயதான அபிமன்யு என்ற நபர், 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயதே ஆன மைனர் சிறுமிக்கு தொல்லை தந்ததோடு காதலிக்கிறேன் எனக் கூறி மொபைல் போன் வாங்கித் தந்து முறைகேடாக செயல்பட்டுள்ளார். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அபிமன்யு வீட்டுக்குச் சென்று கண்டித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமியின் தந்தை தாக்கியதில் அபிமன்யு உயிரிழந்துள்ளார். காவல்துறை அந்த தாய், தந்தையை கைது செய்து விசாரித்து வருகிறது.

12 வயதே ஆன சிறுமிக்கு அபிமன்யு செய்தது Pedophile-ல் சேரும். POCSO வழக்கிற்கு உட்பட்டது. இதை அப்படியே மறைத்துவிட்டு, சிறுமியின் தந்தை ஒரு கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு dash மாமனின் ITWing கண்டதை வாந்தி எடுத்துள்ளது. இதில் தந்தையை தாக்கும் த.வெ.க ITwing, அபிமன்யு செய்த செயலை மறைப்பது ஏன்? அபிமன்யுவும் த.வெ.க ஆதரவாளர் என்பதாலா? அப்படி என்றால் இந்த Pedophile தனத்தை த.வெ.க ஆதரிக்கிறதா? தாய்மாமன் ஆட்சி என்று ரீல் விட்டுக்கொண்டுத.வெ.க ITwing இது போன்ற செயல்களை நியாயப்படுத்தப் பார்க்கிறது. அப்படியென்றால் இது தாய்மாமா ஆட்சியா? இல்லை dash மாமாவா? எனக் கேட்கத்தானே செய்வார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.