“Resort Politics செய்யாத ஒரே இயக்கம் திமுக” - உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்ற இளைஞரணி என்றும் துடிப்புடன் செயல்படும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் நம்முடைய வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சென்னை வருவதற்கு டிக்கெட் புக் செய்து கொண்டிருந்தார்கள். இன்று இருக்கக்கூடிய ஆளுங்கட்சியும் பிற கட்சிகளும் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் திருட்டுத்தனமாக சென்று தங்குதவதற்கு ரிசார்ட்டில் ரூம் புக் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் திமுகவிற்கும் மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசம். தமிழகத்தில் என்றுமே ரிசார்ட் அரசியல் செய்யாத ஒரே இயக்கம் நம்முடைய இயக்கம்தான். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்ற இளைஞரணி என்றும் துடிப்புடன் செயல்படும்.

