தவெகவுக்கு அழைப்பு விடுத்த திமுக

 
ச் ச்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நவ.2ம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தவெகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. 

SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளவிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும்  சதித் திட்டத்திற்கு எதிராக போராடிட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக கூட்டணி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற நவம்பர் - 2 அன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு தவெகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.  அரசு சார்பில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் பனையூர் தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளர் ஆனந்திடம் நேரில் அழைப்பு விடுத்தார்.