2026-ல் தி.மு.க. இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் - தமிழிசை சவுந்தரராஜன்..!
Jan 24, 2026, 06:15 IST1769215511000
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இன்றைய தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் உற்சாகமாக இருந்தார், கூட்டணி தலைவர்கள் உற்சாகமாக இருந்தனர், தொண்டர்கள் உற்சாகமாக இருந்தார்கள்.
எல்லாரும் சொன்னதுபோல் காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. கொஞ்ச நேரம் கூட எட்டிப் பார்க்கவில்லை. இதில் இருந்து இயற்கையே எங்களோடு இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. பிரதமர் மோடி சொன்னது போல் 2026-ல் தி.மு.க. இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

