நாளை கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

 
arivalayam

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் , பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் திருவாரூர் நிகழ்ச்சி தொடர்பாகவும் திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழு நாளை காலை ஆலோசனை நடத்துகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

kalaignar

முன்னாள் முதலமைச்சரும்,  திமுக தலைவருமான கருணாநிதி 1924 ஆம் ஆண்டு பிறந்த நிலையில்  அவரது நூற்றாண்டு விழா  வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில்  கலைஞர் கோட்டம்  திறப்பு விழா நடைபெறும் என்றும்  அகில இந்திய தலைவர்கள் இதில் கலந்துகொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இவ்விழாவை சிறப்பாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

stalin

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி ஜப்பான் , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திக்க செல்லும் நிலையில் , அவர் ஜூன் 2ம் தேதி தமிழகத்தில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடங்க இருப்பதால் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதித்து பொறுப்பாளர்களின் நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.