திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் - முக்கிய அறிவிப்பு

 
cm stalin

வரும் 20ஆம் தேதி  திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

duraimurugan

 

கடந்த மார்ச் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை மக்கள் விழாவாக நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஜூன் 3 முதல் அடுத்த ஜூன் வரை ஓராண்டு கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கத்தில் புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பெரும் முயற்சி ஏப்ரல் 3 முதல் தொடங்கி ஜூன் மூன்று வரை நடைபெறும் என்று கூறப்பட்டது.

tn

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.5.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.