திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!
Jul 11, 2026, 10:45 IST1783746949526
தி.மு.க., தலைமை நிலையச் செயலர் பூச்சி முருகன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் துணைத் தலைவராகவும் உள்ளார்.
இவர், தன் நண்பர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் திடீரென மயக்கமடைந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

