"திமுக அரசின் மோசமான மூன்றாண்டு கால ஆட்சி" - தினகரன் விளாசல்!!

 
tn

தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி என்று தினகரன் விமர்சித்துள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தீயசக்தி என மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டு, அவர் உயிரோடு இருந்த வரை ஆட்சி அதிகாரத்திற்குள் வரவிடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திமுக, எக்காலத்திற்கும் திருந்தாது என்பதற்கு கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது கடந்த மூன்றாண்டு கால திமுக அரசின் அவல ஆட்சி. மக்கள் விரோதப் போக்கு என்ற ஒன்றை மட்டுமே இலக்காய் நிர்ணயித்து செயல்படும் திமுகவால் மாணவ, மாணவியர்கள் தொடங்கி பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருமே நாள்தோறும் கடும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், வெடிகுண்டு கலாச்சாரம் என அன்றாடம் நடைபெறும் அநியாயங்களும் அக்கிரமங்களும் வானளவு உயர்ந்து நிற்கின்றன. ஆணவப் படுகொலைகள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்களின் அராஜகம் வரை மக்கள் விரும்பாத எண்ணற்ற நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறன.

TTV STALIN

இந்த நிலையில் திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை குறிப்பிடும் விதமாக "தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில் தன்னைத் தானே பெருமை பேசி முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஏற்கனவே கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழகத்தில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தோடு கூடிய கடும் துயரங்களையும் பரிசாக தந்திருக்கும் திமுகவின் மக்கள் விரோதச்
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 • செயல்களில் ஒருசிலவற்றை இங்குமக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த இதய தெய்வம் அம்மாஅவர்களின் நாடு போற்றும் நல்ல திட்டங்கள் முடக்கம்.
 • நேர்மையற்ற, வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தால் அரசின் அனைத்து துறைகளின் மீதும் எழும் ஊழல் புகார்கள்
 • நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களால் சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கு
 • ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை
 • போதைப் பழகத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்
 • தலைவர் இல்லாத டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் நிகழும் குளறுபடிகளால் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்
 • பால்விலை மற்றும் மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி, குடிநீர் வரி பன்மடங்கு அதிகரிப்பு
 • காய்கறிகள் தொடங்கி பருப்பு வகைகள் வரையிலான அனைத்து வித அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு
 • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள்
 • ஆளுங்கட்சியினரின் தவறுகளையும் முறைகேடுகளையும் தட்டிக்கேட்கும் அரசு அதிகாரிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் 
 • காவிரியிலிருந்து நீரை உரிய நேரத்தில் பெற்றுத்தர முடியாத திமுக அரசால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் தங்களின் சொந்த நிலங்களை பாதுகாக்க போராடும் விவசாயிகள் மீது பாய்ச்சப்படும் குண்டர் சட்டம்
 • மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டால் தவித்துவரும் நோயாளிகள்
 • ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள்
 • நகர்ப்பகுதிகள் தொடங்கி கிராமப்புறங்கள் வரையில் நாள்தோறும் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு
 • முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு

இப்படியாக தமிழக மக்களை அளவில்லா துன்பங்களில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசின் கடந்த மூன்றாண்டுகளும், துயரத்தின் தொடர்ச்சியான ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.