MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு..!

 
MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு..!

மதுரையில் எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாநகர ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவராக இருந்தவர் மானகிரி கணேசன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  தமிழக ஆளுநரை மாற்றக்கோரி, சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை அருகே  தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் உடல்நலன் பாதித்த அவர் சில காலம் ஓய்வில் இருந்தார்.  அத்துடன் திமுகவினர்  தம்மை  கண்டுகொள்ளவில்லை எனவும், உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்பதாலும் விரக்தியிலும் இருந்துள்ளார். மேலும், திமுகவினர் சிலர் கட்சியின் பெயரை சொல்லி பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது குறித்தும்,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  திமுக தலைமைக்கும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோருக்கு  புகார் கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போக்குவரத்து காவலர் அபராதம் போட்டதற்காக நீதிமன்றத்தில் தீக்குளித்த இளைஞர்!

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மூலக்கரை பகுதியிலுள்ள திமுக எம்எல்ஏ கோ.தளபதியை சந்தித்த மானகிரி கணேசன்,  அவரது வீட்டின் முன்பாக தீக்குளித்தார். இதில்  90% காயத்துடன் மீட்கப்பட்ட அவர்  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர். திமுக எம்எம்ஏவை சந்தித்தபிறகு அக்கட்சி நிர்வாகி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மதுரையில்  கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.