சூலூரில் திமுக விழாவில் விபத்து – கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!
Apr 8, 2026, 14:49 IST1775639999647
சூலூர் திமுக வேட்பாளர் அலுவலக திறப்பு விழாவின் போது சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் லாரியில் சிக்கி விபத்து ஏற்பட்டது இதில் திமுக தொண்டருக்கு வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி படுகாயம் அடைந்தார்.
சூலூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தளபதி முருகேசன் கட்சி அலுவலகத்தை திறந்த போது சாலையில் விபத்து ஏற்பட்டு திமுக தொண்டர் படுகாயம் அடைந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. உடனே ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



