விஜயகாந்த் பிறந்தநாள் விழா- கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலி

 
death

பண்ருட்டி அருகே விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஏற்பாட்டின் போது, கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது இன்று மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை தமிழக முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் நெய்வேலியில் கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவர் இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் பகுதியில் கொடி கம்பம் நடுபனியை ஈடுபட்டுள்ளார். 


கொடிகம்பம் நடும் போது மேலே சென்ற உயர்அழுந்த மின்சாரக் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதால் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயற்சி செய்த மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக பிரமுகர் வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.