ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா?- டிஆர்பி ராஜா

 
trb raja

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா? என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை என சட்டப்பேரவையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா உரையாற்றினார். இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளத்தில், “தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா? #ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வந்ததும் இளைஞர்கள்தான். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததும் அந்த இளைஞர்களின் எழுச்சிதான். அந்த இளைஞர்களிடமே இன்று ஜல்லிக்கட்டு சீரழிவை ஏற்படுத்துகிறது என்று சொல்வதுதான் இவர்களின் அரசியலா? ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதோடு நிற்காமல், அதன் பெருமையை உலகறியச் செய்ய அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கமே அமைத்தவர் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ஆனால் இன்று இவர்கள் ...” எனக் குறிப்பிட்டுள்ளார்.