“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை… சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி
தற்போது வரை நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பேன். லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனது அறையில் சோதனையிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். எப்படிப்பட்ட சோதனையாக இருந்தாலும் சந்திக்க தயார். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. எவ்வித ஆவணமும் கைப்பற்றவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை என்னிடம் கையேழுத்து வாங்கி சென்றுள்ளனர். சோதனையில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. மூத்த அமைச்சர்கள் மீது புகார்கள் பெறுவதில் இந்த அரசு முனைப்பா இருக்குது.. எந்த வழக்காக இருந்தாலும், எப்படிப்பட்ட சோதனையாக இருந்தாலும் தைரியமாக சந்திப்போம்” என்றார்.

