“திமுக, அதிமுக கட்சிகள் இணைவதற்கே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது”- உடைத்து பேசிய சாமிநாதன்

 
“திமுக, அதிமுக கட்சிகள் இணைவதற்கே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது”- உடைத்து பேசிய சாமிநாதன்

திமுக, அதிமுக கட்சிகள் இணைவதற்கே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது, எதிரிக்கு எதிரி நண்பன் என முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சாமிநாதன், “திமுக, அதிமுக கட்சிகள் இணைவதற்கே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது, திமுக - அதிமுக கூட்டு சேர்ந்தால் என்ன நடந்து விடப் போகிறது? இரண்டு கட்சிகள் (திமுக - அதிமுக) கூட்டு சேர்வதில் என்ன தீமை ஏற்பட்டுவிடப் போகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சில நேரங்களில் கூட்டணி உருவாகும். மதிமுக பிரிந்து செல்லும் போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பின்னர் கூட்டணி சேரவில்லையா? இன்னும் பார்க்கப் போனால் கடந்த காலங்களில் (திமுக - அதிமுக) கட்சிகளும் ஒன்று இணைவதற்கே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றி உறுதி” என்றார்.