விஜய்யின் லட்சணம் இதுதானா?- கீதா ஜீவன் கேள்வி

 
minister geetha jeevan

‘சம வேலைக்கு சம ஊதியம்’ உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை கொடூரமான தாக்கி கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தன்னை தாய்மாமன், அண்ணன் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் விஜய் பெண்களையும், குழந்தைகளையும் நடத்தும் லட்சணம் இதுதானா? என தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது எக்ஸ் தளத்தில், “‘சம வேலைக்கு சம ஊதியம்' உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை கொடூரமான தாக்கி கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது!  'நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இடைகால பணியாளர்கள் பொறுப்பிலிருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என வாக்குறுதி கொடுத்தது தமிழக வெற்றிக் கழகம். ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆன இச்சூழலில், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள் செவிழியர்கள். அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக தீர்த்திருக்க வேண்டிய ஆட்சியாளர்கள் காவல்துறை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது தவெக அரசு. அதில் செவிழியர் ஒருவரின் குழந்தை காவல்துறையினரால் தாக்கப்பட்டிருப்பது கொடூரத்தில் உச்சம்.

தன்னை தாய்மாமன், அண்ணன் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் விஜய் பெண்களையும் குழந்தைகளையும் நடத்தும் லட்சணம் இதுதானா.. திட்டங்களுக்கெல்லாம் 'சீர்... சீர்' என பெயர் வைத்துக்கொண்டு ஜனநாயக உரிமைகளை சீரழிப்பதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதல்வரே.. அண்ணனாக, தம்பியாக,இருப்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் மனிதத்தன்மையுடன் ஆட்சி நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். 'தமிழக அரசை எதிர்த்து போராடினால் இதுதான் கதி' என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தவெக அரசின் பாசிச போக்குக்கு கடும் கண்டனங்கள். கைதான செவிழியர்கள் விடுவிடுத்து அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.