திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

 
கனிமொழி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இன்று (23-01-2024) பகல்‌ 12.00 மணியளவில்‌, சென்னை, அண்ணா அறிவாலயம்‌, முரசொலி மாறன்‌ வளாகத்தில்‌ உள்ள கூட்ட அரங்‌கல்‌, நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ தேர்தல்‌ அறிக்கை தயாரிக்கும்‌ குழுக்‌ கூட்டம்‌ துணைப்‌ பொதுச்செயலாளர்‌ கனிமொழி கருணாநிதி, எம்‌.பி, தலைமையில்‌ நடைபெற்றது.

DMKs election manifesto will be the heroine: Kanimozhi MP

 இக்கூட்டத்தில்‌ தலைமைக்‌ கழக செய்தி தொடர்பு தலைவர்‌ டி.கே.எஸ்‌.இளங்கோவன்‌, விவசாய அணிச்‌ செயலாளர்‌ ஏ.கே.எஸ்‌.விஜயன்‌, சொத்து பாதுகாப்புக்குழு௧ செயலாளர்‌ மாண்புமிகுபி.டி.ஆர்‌.பழனிவேல்‌. இயாகராஜன்‌, தகவல்‌ தொழில்நுட்ப அணிச்‌ செயலாளர்‌ டி.ஆர்‌.பி.இராஜா, வர்த்தகர்‌ அணி துணைத்‌ தலைவர்‌  கோவி.செழியன்‌, மாநிலங்களவை கழக உறுப்பினர்‌ கே.ஆர்‌.என்‌.ராஜேஸ்குமார்‌, மாணவர்‌ அணிச்‌ செயலாளர்‌ .வி.எம்‌.பி.எழிலரசன்‌, எம்‌.எல்‌.ஏ. அயலக அணிச்‌ செயலாளர்‌ எம்‌.எம்‌.அப்துல்லா, எம்‌.பி. மருத்துவர்‌ அணிச்‌ செயலாளர்‌ மருத்துவர்‌ எழிலன்‌ நாகநாதன்‌, எம்‌.எல்‌.ஏ. வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர்‌ பிரியா ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.  

முதலமைச்சர்‌ வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ அறிக்கை தயாரிக்கும்‌ குழு ழ்கண்ட அட்டவணைப்படி பயணம்‌ மேற்கொண்டு, தொழிற்துறையினர்‌, கல்வியாளர்கள்‌, மீனவர்கள்‌, சிறுகுறு தொழில்‌ முனைவோர்கள்‌, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்‌, மாணவர்‌ சங்கங்கள்‌, சூழலியலாளர்கள்‌, மருத்துவர்கள்‌, தொண்டு நிறுவனங்கள்‌, அரசு மற்றும்‌ தனியார்‌ துறை ஊழியர்கள்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ கழக நிர்வாகிகள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும்‌ நேரடியாக சந்தித்து, அவர்களின்‌ கோரிக்கைகளை பெறுவார்கள்‌. இதையடுத்து வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆரணி, விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.