திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

 
Kanimozhi

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்; தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

kanimozhi

அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் குழு  அமைக்கப்பட்டுள்ளது.  இதில் ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்) டி.ஆர்.பி.இராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.,  சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மேயர் பிரியா  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

arivalayam

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பகல் 12 மணிக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கூழு கூட்டம் கூடுகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 10 பேர் தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளனர். நேற்று தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடிய நிலையில், தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது.