திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

 
duraimurugan duraimurugan

திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்க எம்.பி. கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Duraimurugan

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. வெல்லும் தமிழ் பெண்கள், உடன்பிறப்பே வா, மக்கள் சந்திப்பு என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் திமுக தற்போது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டபேரவை தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் திமுக செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் குழுவில் உள்ளனர். கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் உள்ளிட்டவர்கள் அமைந்த குழுவை அமைத்து பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.