வரும் ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு
Nov 21, 2023, 19:00 IST1700573438151

வரும் ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, தியாகராயர் நகர், “ஓட்டல் அகார்டில்” நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு மற்றும் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.