திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்- நேருவின் ஆதரவாளர்கள் 4 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

 
duraimurugan

திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் திருச்சி சிவா.   திமுகவின் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமானவர் கே. என். நேரு.   இவர்கள் இருவரும்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.     திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டு இருக்கிறது.   இதை அமைச்சர்  கே. என். நேரு திறந்து வைத்திருக்கிறார்.   இந்த திறப்பு விழாவிற்கான கல்வெட்டில் திருச்சி சிவா எம். பியின் பெயர் இடம் பெறவில்லை.  இதனால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.  தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்திருக்கிறார்கள். 

sh

இந்நிலையில் இந்த நிலையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் இன்று காலையில் சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.   இந்த தாக்குதலில் திருச்சி சிவா வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது.  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்ததால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது, நேரு ஆதரவாளர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tr

இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.துரைராஜ், 55-வது வட்ட செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.