“முதலமைச்சரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்...வெற்றி பெற்றவர்களெல்லாம் வீரர்கள் அல்ல”- துரைமுருகன்

 
துரைமுருகன்

முதலமைச்சரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். கரூர் விவகாரத்தில் திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுக்கு சிபிஐ முடிவு செய்யும் என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “எதிர்க்கட்சிகளையும் அரவணைக்கும் விதமாக முதல்வர் பேசுவதைதான் இதுவரை கேட்டிருக்கிறேன். முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும், பட்டாக்கத்தி விஷயங்களைப்போல், எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசுவது முதல்வருக்கு முறையல்ல. கரூர் விவகாரத்தில் திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுக்கு சிபிஐ முடிவும் செய்யும். வெற்றி பெற்றவர்களெல்லாம் வீரர்கள் அல்ல... சபையில் இருந்து வெளியேறுவது எதிர்கட்சிகளின் உரிமை. எந்த சபாநாயகரும் கதவை மூடிவிட்டு, தடுத்துவிட  முடியாது, சால்னா கடை விமர்சகருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.