நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

 
dmk dmk

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

dmk

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. அந்தவகையில் திமுகவும், ஓரணியில் தமிழ்நாடு என திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்திவருகிறது. ஒருபக்கம் உங்களுடன் ஸ்டாலின் என மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முகாமும், மறுபக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் மக்களை நேரடியாகவும் சந்தித்துவருகிறார்.

இந்நிலையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 17) காலை 10 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காணொளியில் நடைபெறும் கூட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

.