இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  
 
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது.  இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து  தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.