திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது!!

 
duraimurugan

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை  நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

stalin

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-03-2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

duraimurugan

திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.