மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்!
மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சி வளர்ச்சிப் பணிகள், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யபட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி, அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் எனத்
நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசின் சாதனை ஆட்சி தொடரட்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்றது.


