“மகளிர் ஆதரவு இருக்கு! நிச்சயம் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்”- உதயநிதி ஸ்டாலின்

 
“மகளிர் ஆதரவு இருக்கு! நிச்சயம் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்”- உதயநிதி ஸ்டாலின் 

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் தோற்கவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

திமுக செயற்குழுவில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. 2024 தேர்தலில் 221 தொகுதிகளில் நாம் முதலிடம்.முதலமைச்சர் powerful, charismatic leader ஆக இருக்கிறார்.நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை.இந்தியாவுக்கான வெற்றி. ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபடும்.200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 221 தொகுதிகளில் நாம் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கிறோம். அதற்கு காரணம், நம் முதலமைச்சர் தீட்டிய திட்டங்கள்தான். திராவிட மாடல் அரசின் சாதனைகளை நாம் வீடுவீடாக அனைவரிடமும் கொண்டுச் சேர்க்க வேண்டும். 

சமூக வலைதளங்களில் நம்மை வழுப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். திமுகவின் அனைத்து அணிகளும் (Wing) சிறகுகளாக செயல்பட்டு உயர பறக்க வேண்டும்” என்றார்.