இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மகனுக்கு வாய்ப்பு- திமுக முடிவு
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் இசக்கி சுப்பையாவுக்கு எதிராக திமுக சார்பில் ஓபிஎஸ் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளராக இசக்கி சுப்பையா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக திமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் இந்த தொகுதியில் இல்லை. இதனாலே தொடர்ந்து மூன்று முறை இசக்கி சுப்பையா வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த தொகுதி முக்குலத்தோர் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் தொகுதி என்பதால் கடந்த தேர்தலில் கூட நாடார் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் துரை என்பவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த பகுதியில் 40 ஆயிரம் மக்கள் மட்டுமே நாடார் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தினரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று திமுக தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில் சமூகத்தின் பிரதிநிதியாகவும் நன்கு தெரிந்த முகம் கொண்ட ஒரு நபரை நிறுத்த முதல்வர் மு க ஸ்டாலின் யோசித்து வருகிறார்.
அந்த அடிப்படையில் தென் மாவட்டத்தின் முகமாக அறியப்படும் ஓ பன்னீர்செல்வத்தின் மகனை வேட்பாளராக நிறுத்தினால் இசக்கி சுப்பையாவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியும் என்று திமுகவினர் தலைமைக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக தலைமை எந்த ஒரு முடிவும் செய்யவில்லை. ஒருவேளை ஓ பன்னீர்செல்வம் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் இசக்கி சுப்பையாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் அவர் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் திமுக யாரை வேட்பாளராக நிறுத்தப் போகின்றது என்கிற எதிர்பார்ப்பில் தான் அவர்களும் உள்ளனர். அதை வைத்து தான் பிரச்சாரத்தை தீவிர படுத்தவும் தவெகவினர் திட்டமிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடிவடையும் நிலையில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக வேட்பாளரை பார்த்து தமிழக வெற்றி கழகம் வெற்றி எளிதாக இருக்கிறதா? இல்லை கடினமாக இருக்கிறதா என்பது தெரியும்.

