திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

 
arivalayam

திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று  வருகிறது 

dmk

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்; தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  உத்தரவிட்டார். அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி , அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

dmk

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கோவை, சேலம் மாவட்டங்களின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு முத்துசாமி , தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.