கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில் திமுக போட்டி?
Mar 22, 2026, 17:26 IST1774180560000
கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளதாக கெரிகிறது.
2021 தேர்தலை விட 14 தொகுதிகளை குறைத்து போட்டியிட திமுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்சிகள் இணைப்பால் 159 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காண வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் 173 இடங்களில் திமுகவின் வேட்பாளர்களும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடதக்கது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கியதால் குறைந்த தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளதாக கெரிகிறது.

