BREAKING | திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தானது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தத்தை இறுதி செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தலைவர் ஆகியோர் அண்ணா அறிவாலயம் வந்தனர். அங்கு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொது தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிில் போட்டியிடுவதெனவும், நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

