பலாப்பழம் பறித்ததும் பறிபோன இளைஞர் உயிர்! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 
MK stalin letter MK stalin letter

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமம், பிலாபுஞ்சையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வட்டம், வடகாடு கிராமம், பிலாபுஞ்சை பகுதியைச் சேர்ந்த திரு.ராமநாதன் என்பவரின் மகன் திரு.வீரபாண்டி (வயது 21) என்பவர் கடந்த 23.3.2025 அன்று ஆலங்குடி வட்டம், மாங்காடு கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான பலா தோட்டத்தில் பலாக் காய்கள் பறித்துக்கொண்டிருந்தபோது மேலே மேலே சென்ற மின்கம்பியிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.