கிறிஸ்தவர்களின் வாக்கு திமுகவுக்கே... பேராயரை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள்
இன்று திங்கள் கிழமை (13/4/26) அன்று சென்னையில், RC ArchBishop of Tamilnadu ஜார்ஜ் அந்தோணிசாமியை திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பி.கே. சேகர்பாபு - துறைமுகம், மா.சுப்பிரமணியன் பி.ஏ.எல்.எல்.பி., - சைதாப்பேட்டை, ஆர்.டி.சேகர் பி.காம்., பி.எல்., - பெரம்பூர், தா.வேலு பி.ஏ. எல்.எல்.பி., - மயிலாப்பூர், காரம்பாக்கம் கணபதி - மதுரவாயல், டாக்டர் அ.பு.பூர்ணிமா எம்.பி.பி.எஸ். எம்.டி., - அம்பத்தூர், ஜே.ஜே.எபினேசர் எம்.காம், .பி.எல்., - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கார்த்திக் மோகன் பி.இ.எம்.எஸ்., - வில்லிவாக்கம், கே.எஸ்.ரவிச்சந்திரன் பி.எஸ்.சி.,பி.எல்., - திரு.வி.க நகர் (தனி), தமிழன் பிரசன்னா பி.எல்., - எழும்பூர் (தனி), பிரபாகர்ராஜா எம்.டெக்., எம்.பி.ஏ., - விருகம்பாக்கம், ராஜா அன்பழகன் பி.காம்., - தியாகராய நகர், எழிலன் நாகநாதன் - ஆயிரம் விளக்கு ஆகியோர் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் சி.எஸ்.ஐ மெட்ராஸ் மறை மாவட்டத்தின் பிஷப் மேதகு பவுல் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள RC கிறிஸ்தவ மக்களின் ஆதரவு தொடர்ந்து திமுகவிற்கு இருப்பது இத்தகைய கூட்டம் மூலம் எதிரொலிக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சருடன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. P. வில்சன் எம்.பி. அவர்களும் கலந்து கொண்டார்.



