“வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க சிலர் திட்டம்”- திமுக வேட்பாளர் பரபரப்பு மனு

 
ச்

பெருந்துறை தொகுதி வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால்,  கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் வலியுறுத்தி உள்ளார்.

ஏன் எனக்கு சீட் கொடுக்கலை!' - கலங்கி நிற்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்!-  perundurai mla thoppu venkatachalam upset denied seat in election 2021 -  Vikatan

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து அவர் அளித்த  மனுவில், வாக்கு எண்ணிக்கை  நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததாகவும்​, இது போன்ற சம்பவங்கள் நடந்தால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளதால், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குத் தகுந்த கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு இரண்டு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் ஈரோடுகிழக்கு, மேற்கு மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி அந்தியூர் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மையத்தில் பெருந்துறை வாக்கு எண்ணும் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.