திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது!!

 
arivalayam

நாடாளுமன்ற தேர்தலையொட்டி  21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை அறிவிக்கிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

stalin

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக திருச்சியிலும், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக என திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக. எஞ்சிய தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி
சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்.

stalin

இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச் 20) வெளியிடுகிறார். சென்னை அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.