திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு..
Sep 1, 2024, 11:52 IST1725171746637

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டான இந்த வருடம் செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி விருது பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ் தாசனுக்கும் வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.