பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைக்கிறது திமுக-காங்கிரஸ்! – நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பதிவு..!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 33% இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தவிடாமல் அராஜகம் செய்து மகளிர் முன்னேற்றத்தை சுக்குநூறாக உடைத்து ஒட்டுமொத்த இந்தியப் பெண்களையும் வஞ்சித்த திமுகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சமூக நீதி என்ற வார்த்தையை உச்சரிக்கும் தகுதியையே இன்று இழந்துவிட்டது!
தப்பித்தவறி கூட பெண்கள் முன்னேறிவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திமுக மற்றும் காங்கிரஸின் இன்றைய அகங்காரச் செயல், மிகப்பெரும் வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அப்பட்டமான பச்சை துரோகம்! ஆனால், இதற்கெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தைக் கைகழுவும் கோழையல்ல நம் பாஜக! பெண்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் விதமாக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கூடிய விரைவில் நிறைவேற்றி பெண்கள் முன்னேற்றத்தை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு உறுதி செய்யும்! இது நிச்சயம்!
அதே வேளையில், காலங்கள் மாறினாலும் திமுக மற்றும் காங்கிரஸின் இந்தக் கொடூர துரோகத்தை நம் பெண்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்! நிச்சயமாக வஞ்சக திமுக மற்றும் காங்கிரஸை சட்டமன்றத் தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிவர் எம் தமிழகப் பெண்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


