திமுக மற்றும் அதிமுக 139 தொகுதிகளில் நேரடி மோதல்

 
ச்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக 139 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளது.

Image

அதன்படி வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக சார்பில் சீனிவாசனும், அதிமுக சார்பில் கேபி முனுசாமியும் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ் மற்றும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுபேர்கானுக்கும், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கும் கடும் போட்டி என்றே சொல்லலாம். தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்டிகேயனும், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியும் நேருக்கு நேர் களம்காணுகின்றனர். மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி சார்பில் சுந்தர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் பழனிவேல் தியாகராஜன்  அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியும், அதிமுக வேட்பாளராக ராஜன் செல்லப்பாவும் மோதவுள்ளனர்.