திமுக, அதிமுக கண்டு கொள்ளவில்லை..! 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி..!

 
1

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான் திமுக -அதிமுக கட்சிகள் தங்களை கண்டு கொள்ளாததால் 4 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

திருச்சி லால்குடியில் போட்டியிடப் போவதாகவும் அவரது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தேர்தலில் தனித்து நிற்பது குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக திமுகவில் சீட் கேட்டு 6 மாதமாக அலைந்தோம். எந்த பலனும் இல்லை. பின்பு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை சிலமுறை சந்தித்து வாய்ப்பு கேட்டேன் . 2 கட்சிகளும் கண்டு கொள்ளாததால் திருச்சியில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 10 முறை, 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தாவைகள் பூர்த்தி செய்ய்ப்படவில்லை. எல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.