வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக, அதிமுக வாக்களிப்பு

 
admk

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறிய நிலையில், திமுக மற்றும் அதிமுக  எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.  இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்த நிலையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 

இந்த நிலையில், மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர். தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்பட அதிமுகவின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மசோதாவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்களித்தார்.