செப்.6 அதிமுக, செப்.2 திமுக- உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமா?

 
s

அதிமுக மற்றும் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை அறிவித்துள்ளன.
 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செப்.6 அன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திமுக  பிரதிநிதிகளுடன், வரும் செப்.02-ம் தேதி மாலை 5 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில் இரு கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபடுகின்றன.