ரூ.100 கோடி மோசடி வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு- அன்பில் மகேஷ்
கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியது என தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.
போலீசார் விசாரணை நிறைவடைந்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "ஏற்கனவே நடந்த விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்தேன். கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு மனம் உறுத்தியது என தெரியவில்லை. ரூ.100 கோடி மோசடி வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக என்னைக் கைது செய்துள்ளனர். குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதையாகவே உள்ளன." என்றார்.

