தொகுதி மறுவரையறைக்கு திமுகவும் ஆதரவு- கூட்டணிக்குள் குமுறல் வெடித்தது

 
a

தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதுவரை தொகுதி மறுவரையறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, திடீரென நிபந்தனைகளுடன் ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு மாறியதாக வெளியான தகவல், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறைக்கு முதலில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அடுத்ததாக திமுகவும் ஆதரவு நிலைக்கு வந்ததாக கூறப்படுவது தான் இப்போது பெரும் சர்ச்சை. நேற்று வரை எதிர்ப்பு, இன்று நிபந்தனை ஆதரவு என்ற இந்த மாற்றம், தமிழக அரசியலில் "என்ன இந்த புது உறவு?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திமுகவின் இந்த நகர்வு யாருக்கு சாதகம்? கூட்டணி கட்சிகளுக்கு ஏன் பாதகம்? நிபந்தனை ஆதரவின் பின்னணி என்ன? என அரசியல் களத்தில் கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன.

திமுகவின் இந்த முடிவால் தவெக மட்டும் கொதிக்கவில்லை, தவெக கூட்டணி கட்சிகளும் அமைதியாக இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். காங்கிரஸ் கேள்வி எழுப்ப, விசிக கடும் எதிர்ப்பு தெரிவிக்க, ஐயூஎம்எல் மற்றும் மதிமுகவுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவின் முடிவால் தவெக கூட்டணியில் தணியாத கோபம் தலைதூக்கியுள்ளதாம். கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவால் தான் இந்த நிலைப்பாடு என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

ஒரு பக்கம் அதிமுக ஆதரவு, மறுபக்கம் திமுக ஆதரவு என அரசியல் கணக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடப்பதால், தவெக கூட்டணியில் அதிருப்தி வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. கொள்கையா முக்கியம்? கூட்டணியா முக்கியம்? அரசியல் நிலைப்பாடா? அதிகாரக் கணக்கா? விடை சொல்ல வேண்டியது தலைவர்கள் மட்டுமல்ல, இந்த மாற்றங்களை கவனிக்கும் மக்களும்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இனி என்ன நடக்கும்? திமுக தனது நிலைப்பாட்டை விளக்குமா? தவெக கூட்டணி சமாதானம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.