ஆளுநர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே, அவர் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்ற மாண்புகள், அரசமைப்பு சாசனம், கூட்டாட்சி கோட்பாடுகளை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.