நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் அமளி!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு ஜன. 31 முதல் பிப்.13 வரை நடைபெற்ற நிலையில், 2ஆவது அமர்வு தொடங்கியது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கியது. அவை தொடங்கியதும் திமுகவினர் மும்மொழி கொள்கை விவகாரத்தை எழுப்பிய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். அப்போது தமிழக எம்.பிக்களை தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்.பி.க்கள் குறித்து பேசிய தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.